
இந்தியாவில் வெயில் காலம் வந்துவிட்டாலே அனைவர் நினைவுக்கும் வருவது மாம்பழம் தான். வெயில் காலத்தில் மாம்பழம், மாங்காய், நுங்கு மற்றும் இளநீர் என மக்கள் தேடத் தொடங்கி விடுகின்றனர். இந்நிலையில் பூனேவில் குரு கிருபா டிரேடர்ஸ் அண்ட் ப்ரூட் ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனம் பல விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிறுவனம் அல்போன்சா மாம்பழங்களை மக்களுக்கு மலிவு விலையில் வழங்குவதற்காக EMI- இல் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி மாம்பழம் வாங்குபவர்கள் 3,6 மற்றும் 12 மாத தவணை முறையில் பணம் செலுத்தலாம். இந்த முறை இந்திய வர்த்தக சந்தைக்கு புதிதாக இருந்தாலும் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.