CRPF 9,212 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தப் பணிகளுக்கு இம்மாதம் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100.
கான்ஸ்டபிள் (டிரைவர்) பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 21-27 வயதும், மற்ற பணிகளுக்கு 18-23 வயதும் இருக்க வேண்டும்.
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு (CBT), உடல் திறன் தேர்வு (PET), திறன் சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவத்தேர்வு மூலம் தேர்வு முறை இருக்கும்.
இணையதளம்: https://crpf.gov.in/