ஐந்தாண்டுகளுக்கு மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தினசரி ஊதியத்தை மூன்று மடங்காக உயர்த்தி பிலிப்பைன்ஸ் மேயர் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிலிப்பைன்ஸில் உள்ள லூனா நகர் மேயர் காதலர்கள் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு காதலர் தின பரிசாக போனஸ் வழங்கி அசத்தியுள்ளார். சிங்கிள் ஊழியர் கூடுதல் நேரம் பணிபுரிய மேயர் போனஸ் வழங்கியுள்ளார்.

5 ஆண்டுக்கு மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தினசரி ஊதியத்தை மூன்று மடங்காகவும் மற்ற ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியமும் வழங்கிய அசத்தியுள்ளார். காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ்களின் நிலையை உணர்கிறேன் என்றும் காதலர் தினத்தன்று யாரும் சாக்லேட், பூக்கள் கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு இதுபோன்ற ஊக்கத்தொகையை வழங்கினேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.