
பாலிவுட் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் ஷாருக்கான். தற்போது பதான் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் சில நாட்களுக்கு முன்பாக ரிலீசானது. இந்த படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகான் உள்ளிட்ட முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். மேலும் சிறப்பு வேடத்தில் நடிகர் சல்மான் கான் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் வசூலை குவித்து வருகின்றது.
இந்த நிலையில் ஷாருக்கானிடம் இளம் ரசிகர் ஒருவர் நான் உங்களை திருமணம் செய்து கொலை கேட்கவில்லை. ஆனால் காதலர் தினம் அன்று நான் உங்களை டேட்டிங் செய்யலாமா? என கேட்டு இருக்கின்றார். இதற்கு ஷாருக்கான் பதிலளித்துள்ளதாவது, நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன். நீங்கள் நல்ல பையனுடன் சேர்ந்து பதான் திரைப்படத்தை பாருங்கள் என தெரிவித்து இருக்கின்றார். இவரை இந்த ட்விட்டர் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
I am boring as a date….take some cool guy and watch #Pathaan in a theatre https://t.co/yCKPFo1QcS
— Shah Rukh Khan (@iamsrk) February 4, 2023