வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த இத்திரைப்படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. படத்தில் சஞ்சய் தத், விஷால், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் வாசுதேவ், மன்சூர் அலிகான், சாண்டி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் காஷ்மீர் சென்ற படக்குழு உடன் விக்ரம் திரைப்படத்தில் ஏஜென்ட் டீனா-ஆக நடித்த வசந்தியும் இடம் பெற்றிருப்பதால் அவர் படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. ஏஜென்ட் டீனா விக்ரம் திரைப்படத்தில் இறந்து விடுவதால் தளபதி 67 விக்ரம் திரைப்படத்தின் காலகட்டத்திற்கு முந்தைய கதையாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக செய்தி பரவி வருகின்றது.