நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்திருக்கின்றது.

நாகலாந்து மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றது. நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் 60 தொகுதிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27-ஆம் தேதி ஒரே கட்ட தேர்தல் ஆக நடைபெற இருக்கின்றது. இதில் பதிவான வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றது.

இந்த தேர்தலில் பாஜக ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுக்கின்றது. இந்த நிலையில் பாஜக நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேற்பாளர்களை அறிவித்திருக்கின்றது. இந்த தேர்தலில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் இதில் பாஜக 20 தொகுதிகளை போட்டியிடுகின்றது. இதன் காரணமாக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்திருக்கின்றது. இதில் மாநில தலைவராக தெம்ஜென் இம்னா அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.