தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் இருவரின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. சென்ற பத்து நாட்களில் வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 239.5 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கின்றது.
இந்த நிலையில் நேற்று, இன்று விடுமுறை என்பதால் படத்தின் வசூல் 250 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வாரிசு திரைப்படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களே கிடைத்தது. இருப்பினும் வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஃபேமிலி சென்டிமென்ட் திரைப்படம் என்பதால் பொங்கல் விடுமுறைக்கு பின் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை எல்லாம் முறியடித்து வசூலித்துக் கொண்டிருக்கின்றது வாரிசு திரைப்படம்.
அஜித்தின் துணிவு திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று 166.85 கோடி வசூல் செய்து இருக்கின்றது. துணிவு திரைப்படம் பல நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் ஒருத்தரப்பு ஆடியன்ஸுக்கு மட்டுமே புரியும் என்பதால் விடுமுறைக்கு பின்னர் வார நாட்களில் வசூல் சற்று குறைந்து காணப்படுகின்றது.
தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு திரைப்படம் 100 கோடி வசூலை நெருங்கி வருகின்றது. வாரிசு திரைப்படம் 99.7 கோடியும் துணிவு திரைப்படம் 94.65 கோடி ரூபாய் வசூலிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாயை இரண்டு திரைப்படம் பெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.