சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைய இருப்பதாக செய்தி கசிந்திருக்கின்றது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதனால் வெற்றியை எதிர்பார்த்து அடுத்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தோல்வி காரணமாக அயலான் திரைப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.

சிவகார்த்திகேயன் மேலும் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் கூட்டணி இணைய இருப்பதாக செய்தி கசிந்து இருக்கின்றது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.