
நானி திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நானி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சிங்காராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது நானி புதிய திரைப்படம் ஒன்றில் நடித்த வருகின்றார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் சில்க் ஸ்மிதாவின் புகைப்படம் இருந்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இத்திரைப்படத்திற்கு தசரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். மேலும் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா, ஜரீனா வஹாப் என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கும் இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். அண்மையில் தாம் தூம் தோஸ்தான் பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியிருக்கின்றது. அதன்படி தசரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக படத்தின் ஹீரோ நானி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து தெரிவித்திருக்கின்றார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்திருக்கின்றது.
An Epic called #DASARA is done 🔥
It’s a wrap
This diamond will shine FOREVER ♥️ pic.twitter.com/2vfAoiSLiE— Hi Nani (@NameisNani) January 12, 2023