தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சென்ற அக்டோபர் 9ஆம் தேதி பிக் பாக்ஸ் ஆறாவது சீசன் ஆரம்பமானது. தற்போது நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. பிக் பாஸ் வீட்டில் இதுவரை சாந்தி, ஜிபி முத்து, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா உள்ளிட்ட வெளியேறி இருக்கின்றார்கள். தற்போது பிக்பாஸ் வீட்டில் ஏழு பேர் இருக்கின்றார்கள். தற்போது 96 நாட்களை நெருங்கி இருக்கும் நிலையில் நிகழ்ச்சி முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. தற்போது வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கின்றார்கள்.

மகேஸ்வரி வீட்டிற்குள் வருகின்றார். அப்போது அவரிடம் அனைவரும் கலந்து பேசி ஒரு சாக்ரிஃபைஸ் விளையாட வேண்டும் என பிக்பாக்ஸ் தெரிவிக்கின்றார். அப்போதே தனலட்சுமி, விக்ரம் உனக்கு ஒரு பகுதி தாடியை எடுத்தடணும், அசீம் அண்ணா சாரி அல்லது சுடிதார் இந்த இரண்டு ட்ரெஸ்ஸில் ஏதாவது ஒன்றை அணிய வேண்டும் என தெரிவிக்கின்றார். இதற்கு அசீம் இது வந்து கீழே போகும் என்பது போல இருக்குது என தெரிவிக்கின்றார்.

அதற்கு மகேஸ்வரி சாரி அல்லது சுடிதார் அணிந்தால் கீழே போனோம் அப்படின்னு அர்த்தம் கிடையாது. வந்ததுமே உங்கள் வேலையை ஆரம்பிக்காதீங்க என மகேஸ்வரியிடம் அசீம் கத்துகின்றார். இதற்கு மகேஸ்வரி நான் பெருக்க, துடைப்பதற்கு எல்லாம் வரல. இதுக்கு தான் வந்திருக்கின்றேன் என கூறுகின்றார். அதற்கு அசீம் அதுக்கு தான் நீங்க வெளியவும் போனீங்க, பேசாம உட்காருங்க என கூறுகின்றார். பிக்பாஸ் விறுவிறுப்பாக சென்றது குறிப்பிடத்தக்கது.