
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் ஒன்பதாவது சுற்றில், பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் 122 வது பூத்தில் வெறும் ஒரு வாக்கு மட்டும் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பூத்தில் திமுக வேட்பாளர் செல்வம் 520 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 219 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ் குமார் 54 வாக்குகளையும் பெற்றுள்ளார்.