நாள்தோறும் இதுபோன்ற ஏதாவது ஒரு செய்தி வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. அரசு என்னதான் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சந்தீப் என்ற இளைஞர் ஒருவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை தொலைபேசியில் அழைத்து தன்னை சந்திக்குமாறு மிரட்டியுள்ளார்.

இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்த நிலையில் ஜூலை 17ஆம் தேதி அவர் தனது நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றிச் சென்று ஒரு விடுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதனை செல்போனில் வீடியோவாக எடுத்து அவர் மிரட்டிய நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அழைத்த புகாரைத் தொடர்ந்து போலீஸ் ஆர் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.