இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் செயல்பாடுகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் வீட்டிலிருந்தபடியே பொருட்கள் மற்றும் உணவு போன்றவற்றை ஆர்டர் செய்கிறார்கள். அந்த வகையில் உணவு ஆர்டர் செய்வதில் முன்னணி நிறுவனமாக zomato இருக்கிறது. இந்த நிறுவனம் தற்போது 2024 ஆம் ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தில் பிரியாணி இருக்கிறது. இரண்டாம் இடத்தில் பீட்சா இருக்கிறது. கடந்த 8 வருடங்களாக பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது. கி

ட்டத்தட்ட 2024 ஆம் ஆண்டு மட்டும் 9.13 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கடந்த வருடம் 10.9 கோடியாக இருந்ததது. அதை காட்டிலும் இந்த வருடம் ஆர்டர் குறைந்துள்ளது. இதேபோன்று கடந்த வருடம் பீட்சா 7.46 கோடி ஆர்டர் செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் 5.84 கோடி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் மற்றொரு உணவு ஆர்டர் செயலியான ஸ்விக்கி முதலிடத்தில் பிரியாணி இருந்ததாகவும் இரண்டாம் இடத்தில் தோசை இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது. மேலும் zomatoவில் ஒவ்வொரு 3 வினாடிக்கும் 3 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.