
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் பெற்ற தந்தையே மகள்களை பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் ஒரு 56 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வரும் நிலையில் அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை பலமுறை தன்னுடைய மகள்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதோடு தன்னுடைய மனைவியையும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தற்போது தான் அவருடைய மனைவி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி அவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவர் ஒரு ரவுடி கும்பலுடன் தொடர்பில் இருப்பவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.