விடாமுயற்சியும், மக்கள் சேவையில் கொண்ட அர்ப்பணிப்பும் ஒருவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் இந்த பெண்மணி. இவர் தனது 8 மாத கர்ப்ப காலத்திலும் சோர்வடையாமல், வெயிலையும் பொருட்படுத்தாமல் தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த போதிலும், தனது இலட்சியத்தில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. அந்த இக்கட்டான சூழலிலும் மன உறுதியோடு செயல்பட்டு, மக்களின் நம்பிக்கையைப் பெற தொடர்ந்து உழைத்தார்.

இதனால் இவரது இந்த அசாத்திய துணிச்சலும், பொதுமக்களுடன் அவர் கொண்டிருந்த நெருக்கமானத் தொடர்பும் இன்று அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்துள்ளன. தடைகளைத் தகர்த்து எறிந்து, இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினராக உருவெடுத்துள்ள இவரது பயணம் பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் பதவியையும் அதிகாரத்தையும் தாண்டி, ஒரு பெண்ணின் விடாமுயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இந்த வெற்றி பார்க்கப்படுகிறது. தற்போது மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ள இவர், தனது தொகுதி மக்களின் நலனுக்காக அதே உத்வேகத்துடன் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.