உலகம் முழுவதும் தற்போது ஏஐ டெக்னாலஜி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் பல்வேறு விதமான நன்மைகள் இருந்தாலும் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கிறது. இதன் மூலம் உண்டாகும் ஆபத்துகளை பலரும் கூறும் நிலையில் இனி வரும் காலங்களில் மனிதர்களுக்கு கூட ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையில்லாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பெண் மோசடி செய்தது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம்  மூலம் புகைப்படங்களை தவறாக சித்தரித்து வெளியிடுதல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பெண் ஆபாச படங்களை உருவாக்கி அதனை ஆண்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

அப்படி கடந்த 8 மாதங்களில் சுமார் 311 ஆண்களை அவர் ஏமாற்றியுள்ளார். இந்த புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பிய அந்த பெண் பணம் தரவில்லை எனில் இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதன்மூலம் இந்திய மதிப்பில் சுமார் 14.6 லட்சம் ரூபாய்க்கு மேல் அவர் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இதுவரை வழக்கு பதிவு செய்யாத நிலையில் சிலர் துணிந்து ‌ புகார் கொடுத்துள்ளனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த 26 வயது பெண்ணை கைது செய்துள்ளனர்.