
நெல்லை மாவட்டம் மானூர் கல்குடி கிராமத்தில் ஒரு முதியவர் வசித்து வருகிறார். இவர் தங்கள் பகுதியில் மின்கம்பம் கேட்டு விண்ணப்பித்தார். தங்கள் இடத்திற்கு மின்கம்பம் கேட்டு முறையிட்ட முதியவரை மின்வாரிய அதிகாரிகள் 8 ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளர்.
இதுதொடர்பாக மானூர் துணை மின்வாரிய அலுவலக அதிகாரிகளை தட்டிக் கேட்கச் வழக்கறிஞரான முத்துவேலு என்பவர் சென்றார்.
அப்போது முத்துவேலுவை சக ஊழியர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் உயர் அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.