தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் அதாவது ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஜூன் 20 முதல் ஜூன் 28 வரை இணையதளத்தில் உள்ளது சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இதில் விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் 125 ரூபாய் மற்றும் இணைய வழி பதிவு கட்டணம் 70 ரூபாய் என மொத்தம் 195 ரூபாய் சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். இந்த நாளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் தேர்வு கட்டணத்துடன் தட்கல் விண்ணப்ப கட்டணம் தொகை 500 ரூபாய் கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.