தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகி போட்டி தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் 110 அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் வந்துள்ளனர். இந்த போட்டியில் இந்தியா சார்பாக நந்தினி குப்தா கலந்து கொள்கிறார்.

இந்த உலக அழகி போட்டி மே 31ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில் தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோவிலுக்கு உலக அழகி போட்டியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். அப்போது போட்டியாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த சில பெண்கள் உலக அழகி போட்டியில் கலந்து கொள்பவர்களை வரிசையாக அமர வைத்து பாத பூஜை செய்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு பிஆர்எஸ் கட்சி தலைவர் நிரஞ்சன் ரெட்டி கண்டனம் தெரிவித்து. அவர் மாநிலத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது அதைப்பற்றி அரசு கண்டுகொள்ளாமல் இப்படி உலக அழகி போட்டியாளர்களுக்கு பெண்களை வைத்து கால்களை கழுவ சொன்னது மிகவும் தவறு என்று கூறியுள்ளார். மேலும் இதோ அந்த வீடியோ,