
அதிமுகவில் நடிகர் உட்பட மொத்தம் 700 பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் புதிதாக கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடிகர் அஜய் வாண்டையார் உட்பட 700 பேர் அதிமுகவில் சேர்ந்துள்ளனர். அஜய் வாண்டையார் தமிழில் ரெட் அண்ட் ஃபாலோ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது.