சவுதி அரேபியாவில் நடந்துள்ள ஒரு வினோத திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது. 70 வயதான ஒரு கோடீஸ்வர ஷேக், தன்னை விட 51 வயது குறைவான, அதாவது 19 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் திருமணத்தில் மணமகன் தனது இளம் மனைவிக்கு 5 கிலோ தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ரோல்ஸ் ராய்ஸ்’ (Rolls-Royce) சொகுசு காரை பரிசாக வழங்கி மிரட்டியுள்ளார். மணப்பெண்ணின் முகத்தில் மின்னும் அந்தப் புன்னகைக்குக் காரணம் கணவரின் பாசமா அல்லது அவர் கொடுத்த கோடிக்கணக்கான சீர் வரிசைகளா என நெட்டிசன்கள் பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர்.
70 Year Old Muslim Man in Saudi Arabia married a 20 year young Girl old enough be his granddaughter and gifted her a Rolls-Royce & 5kgs of Gold at the wedding pic.twitter.com/WwDecTELEv
— Rosy (@rose_k01) March 16, 2026
இந்தத் திருமண வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் இதை ‘பணத்திற்காக நடக்கும் நாடகம்’ என்றும், ‘சிறப்பான எதிர்காலத் திட்டம்’ என்றும் கிண்டல் செய்து வருகின்றனர். அதே சமயம், ஒரு தரப்பினர் இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோவாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். எது எப்படியோ, வயது வித்தியாசம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த முதியவரின் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் தன்மையும், அந்தத் திருமணத்தின் பிரம்மாண்டமும் தான் இப்போது உலகளவில் ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக மாறியுள்ளது.
