
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கேர்கர் நகரில் 7 வயதில் கடத்தப்பட்ட ஹர்ஸ் ராஜ் என்ற சிறுவன், 17 ஆண்டுகள் கழித்து இளம் வழக்கறிஞராக உயர்ந்துள்ளார். 2007-ல் அவனைத் துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் கடத்தியபோது, பல்வேறு மாநிலங்களுக்கு இடமாற்றி போலீசாரை திக்குமுக்காட செய்தனர். சிறுவனின் பெற்றோர்கள் 55 லட்சம் பணம் கேட்டு மிரட்டப்பட்ட நிலையில், போலீசார் கடுமையான விசாரணை நடத்தி, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அவனை மீட்டனர்.
இப்போது 24 வயதான ஹர்ஸ் ராஜ், தன்னுடைய கடத்தல் வழக்கின் இறுதி விசாரணையில் தானே தனது வழக்கறிஞராக நின்று வாதம் செய்து சாதனை படைத்துள்ளார். நீதிபதி அனுமதியுடன், 55 நிமிடங்களில் தனது வாதத்தைத் திறம்பட முடித்த அவர், 14 குற்றவாளிகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை பெற்றார்.
கடத்தலின் பாதிப்புகளையும், தனது குடும்பத்தின் துன்பங்களையும் நினைவுகூர்ந்த ஹர்ஸ் ராஜ், நீதியை நிமிர்த்தி நின்று போராடியவர் என்பதில் பெருமை கொள்கிறார். மேலும் சினிமா பாணியில் தன்னை கடத்தியவர்களுக்கு வக்கீலாக மாறி தண்டனை வாங்கி கொடுத்தது மிகவும் ஆச்சரியமான விஷயமாக அமைந்துள்ளது.