
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பார் உரிமையாளர் ஆன சுரேஷ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாகித்யா (15) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதியுள்ளார். அவருடைய இரண்டாவது மகள் மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் மூத்த மகளுக்கு இளைய மகளுக்கும் இடையே 7 வயது வித்தியாசம்.
இதனால் பெற்றோர் மூத்த மகளிடம் நீ மூத்தவள் என்பதால் தங்கையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கூறியுள்ளனர். இதனால் சாகித்யா தன் பெற்றோர் தன்மீது பாசம் காட்டவில்லை என நினைத்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னைவிட தங்கை மீதுதான் அதிக அளவில் பாசம் காட்டுவதாக அவர் தன் பெற்றோரிடம் அடிக்கடி கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பவ நாளில் இளைய மகள் மக்காச்சோளம் கேட்ட நிலையில் அவர்களுடைய தாய் மூத்த மகளிடம் செய்து கொடுக்குமாறு கூறியதால் அவரும் தன் தாய் சொன்னபடி செய்து கொடுத்தார். இதனால் தன்னுடைய பெற்றோர் தன்மீது பாசம் காட்டவில்லை என நினைத்த சாகித்யா மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்.
இதைத்தொடர்ந்து அறைக்குள் சென்ற சாகித்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய பெற்றோர் தங்கள் மகள் உயிரிழந்ததை நினைத்து கதறி துடித்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.