கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் 7 வயது சிறுவன் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதியது பள்ளியில் இருந்து வெளியே ஓடி வந்த சிறுவன் வண்டி வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க ஓடி உள்ளான். அப்போது மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் தூக்கி வீசப்பட்டு சுயநினைவை இழந்தார்.

இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.