
தென்காசி மாவட்டத்தில் செய்யது அலி (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போலீஸ் ஏட்டு. இவர் அச்ச நல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் பணியை முடித்துவிட்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவருடைய உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இவருடைய உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்ட நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.