
விழுப்புரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு. இவரது மனைவி ஞானாம்பாள்(65). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு ஞானாம்பாள் தனது வீட்டில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஞானாம்பாளின் கழுத்தை நெரித்து கொலை செய்தது உறுதியானது.
இதனை அடுத்து சந்தேகத்தின் பெயரில் செல்லக்கண்ணுவை பிடித்து விசாரித்த போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஞானாம்பாள் பெயரில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தினை தனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு செல்லக்கண்ணு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தீ வைத்து எரித்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் மகிளா நீதிமன்றம் செல்ல கண்ணுக்கு ஆயுள் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.