தமிழகத்தில் அரசு தேர்வில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப  பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு சுமார் 6244 காலி இடங்களில் எந்தெந்த பதவிகள் எந்தெந்த துறையில் உள்ளன, எத்தனை இடங்கள் உள்ளது என்று அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விண்ணப்ப பதிவு செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

அதாவது எந்த துறையில் பணியாற்ற விருப்பம் என்பதை குறிப்பிடும் பகுதியும் அதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வன காப்பாளர் என்ற பதவியில் 363 பணியிடங்களும், வன காவலர் பதவியில் 814 பணியிடங்களும் உள்ளது. இந்த பதவிகளில் மட்டும் சேர விரும்பினால் அதற்கான விருப்பத்தை நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அனைத்து பதவிகளிலும் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்ய நீங்கள் தயாராக இருந்தால் அதற்கான விருப்பத்தை தேர்வு செய்தும், வனத்துறை பதவி வேண்டாம் என்றால் அதையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.