
திருநெல்வேலி மாவட்டம் பெருங்காளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ரீதா(60). இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜதுரை உயிரிழந்ததால் பரிதா குடும்பச் செலவுக்காக ஆடு மேய்த்து வந்ததாக தெரிகிறது.
நேற்று வழக்கம்போல குளக்கரையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மூதாட்டியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க நகை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதனையடுத்து காயங்களுடன் மயங்கி கிடந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.