
தேனி மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி பகுதியில் சுருளி வேல் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளியாக இருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு சுருளி வேல் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமி தன் பெற்றோரிடம் நடந்த விபரங்களை கூற அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுருளி வேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இந்த வழக்கில் குற்றம் உறுதியான நிலையில் தற்போது சுருளிவேலுக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதோடு 40,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 6 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்புக்கு பிறகு மதுரை மத்திய சிறையில் சுருளி வேலை அடைத்தனர்.