இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது மிகுந்த அளவில் இருக்கிறது. அவர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் லைக்ஸ் களை பெற வேண்டும் என்பதற்காகவும் சில சமயங்களில் ஆபத்தான வீடியோக்களை எடுக்கிறார்கள். இதனால் உயிரிழப்புகள் கூட நேரிடுகிறது. இது தொடர்பான செய்திகள் அண்மைக்காலமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது 16 வயது சிறுமி ஒருவர் மாடியில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த சிறுமி உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்தவர். இவர் 11ஆம் வகுப்பு படிக்கும் நிலையில் 6-வது மாடியில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய செல்போன் தவறி கீழே விழுந்துவிட்டது. உடனடியாக போனை பிடிக்க சிறுமி முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்துவிட்டார். இருப்பினும் கீழே இருந்த களிமண் நிறைந்த ஒரு பூந்தொட்டி மேல் விழுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அவரைப் பெற்றோர் வீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.