ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 27 வயதான ஆபாசப் பட நடிகை ஆனி நைட், ஒரே நாளில் 583 ஆண்களுடன் உடலுறவுக் காட்சியில் நடித்ததாக அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் புதிய உலக சாதனை படைத்ததாகக் கூறுகிறார். குறுகிய நேரத்தில் அதிக ஆண்களுடன் உடலுறவு கொண்டதால், ஆனி நைட் அதீத ரத்தப்போக்கு மற்றும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சாதனையை அவர் 6 மணி நேரத்தில் முடித்ததாகவும், ஒரு மணி நேரத்தில் 97 பேருடன் உடலுறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனை, போர்னி ப்ளூ என்ற நடிகை முன்பு செய்த 12 மணி நேரத்தில் 1057 ஆண்கள் என்ற சாதனையை வேக அடிப்படையில் முறியடிப்பதாகவும் அவர் கூறினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனி நைட்டிற்கு, எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் பெண் உடலின் கருப்பை தொடர்பான ஒரு வலிமிகு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் இருந்தவராக இருந்தும், இந்த அளவிற்கு உடலை உபயோகித்ததாலே, அவருக்கு அதிக வலி, வீக்கம் மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பொதுவாக இந்த நோய் பாதிப்புள்ளவர்களுக்கு தசைப் பிடிப்பு, இடுப்பு வலி, மாதவிடாய் குறைபாடுகள், கருவுறுதல் பிரச்சினைகள் போன்றவை ஏற்படுகின்றன. ஆனி நைட் இந்த அறிகுறிகளை புறக்கணித்து, விநோதமான சாதனை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by annie knight (@anniekknight)

இதுபற்றி மருத்துவர்கள் எச்சரிக்கையில், இதுபோன்ற செயல்கள் உடலுக்கு ஆபத்தானவை என்றும், இவை பாலின நோய்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடியவை என்றும் தெரிவித்துள்ளனர். சில ஆபாச நடிகைகள் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்க்க அல்லது புகழ் பெற இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடக்கூடும். ஆனால் இவை இளைஞர்களுக்கு தவறான சிந்தனையை ஏற்படுத்தும் என்பதுடன், தவறான வழிகாட்டுதல்களாகவும் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. ஆனி நைட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலை தற்போது கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.