திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்கரணையில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்து குறித்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் ஒரு புதிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

​விபத்து நடந்த அந்த இறால் ஆலைக்குள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று அவசர அவசரமாக அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வாயு கசிவு ஏற்பட்ட சமயத்தில் ஆலைக்குள் இருந்த இறால் மாதிரிகளை (Shrimp Samples) அதிகாரிகள் கைப்பற்றினர்.

அந்த இறால்களில் அம்மோனியா வாயுவின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காக, அந்த மாதிரிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக உடனடியாக லேபுக்கு (ஆய்வகம்) எடுத்துச் சென்றுள்ளனர். 6 பேர் பலியான ஆலை விபத்தில், இறால் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தச் சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.