தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜில்லா பரிஷத் அரசு பள்ளியில் நடந்த விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹயாத் நகரில் அமைந்துள்ள இந்த அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவனான அஜய் நேற்று மாலை பள்ளி முடிந்ததும், பள்ளி வளாகத்தில் உள்ள இரும்பு கேட்டில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கேட் அஜய் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிதிலமடைந்த கேட்டை சீரமைக்காத அரசு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது என அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இந்த துயரச்சம்பவத்திற்குப் பிறகு, பள்ளியில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை புதுப்பித்து, துருப்பிடித்த கேட் மற்றும் பிற பாதுகாப்பு கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.