தமிழகத்தில் மாவட்ட வாரியாக வருவாய்த்துறை அலுவலகங்களில் சுமார் 564 உதவியாளர் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதே சமயம் திட்டமிட்டபடி அலுவலக வேலைகளை முடிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அலுவலக உதவியாளர் பணியிடங்களை ஆட்சியர்கள் நிரப்பிக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அனுமதி கடிதத்தை 36 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ள நிலையை சிவகங்கை 42 அலுவலக உதவியாளர் பணியிடங்கள், ராணிப்பேட்டையில் எட்டு, அரியலூர் 12, விழுப்புரம் 12, வேலூர் 14 என மற்ற மாவட்டங்களையும் சேர்த்து மொத்த 574 காலி பணியிடங்கள் உள்ளது. இதனை தமிழ்நாடு அடிப்படை பணி விதிகள் மற்றும் நெறிமுறைகளின் படி வழிகாட்டுதல்களை பின்பற்றி அந்த பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.