
உத்தர் பிரதேஷ் மாநிலம் காஷ்யபத் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷத் – ராசியா தம்பதி. நவ்ஷத்தின் 10 வயது மகன் தான் ஆத். நவ்ஷத் மற்றும் ராசியா தங்கள் வீட்டில் வைத்திருந்த 500 ரூபாயை காணாததால் சிறுவன் ஆத் தான் பணத்தை எடுத்து இருக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்தனர். இதனால் நவ்ஷத் பெற்ற மகன் என்று கூட பாராமல் ஆத்தை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் நவ்ஷத் சிறுவனின் தலையில் அடிக்க அவ்விடத்திலேயே ஆத் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்து விசாரித்ததில் நவ்ஷத் மற்றும் ராசியா இருவரும் சேர்ந்து சிறுவனை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.