ஹரியானாவில் உள்ள சவுத்ரி லால் தேவி பல்கலைக்கழகத்தில் படிக்கும் 500 மாணவிகள் பிரதமர் மோடி அவர்களுக்கும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் அவர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் ஒருவர் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த பேராசிரியர் மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து கழிவறைக்கு அழைத்து சென்று அந்தரங்க பாகங்களை தொட்டு தவறாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு அந்த கடிதத்தில் இது குறித்து துணைவேந்தரிடம் முறையிட்டபோது அவர் மாணவிகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.

ஆனால் இது பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளனர். பெயர் இல்லாமல் இந்த கடிதம் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றதைத் தொடர்ந்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.