
கடந்த 2016 ஆம் வருடம் வெளியான “கிரிக் பார்ட்டி”என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சுல்தான் படத்தின் மூலமாக தமிழிலும், அனிமல் படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் அறிமுகமானார். தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இவர் சமீபத்தில் புஷ்பா-2 படத்தில் நடித்து பட்டையை கிளப்பினார். புஷ்பா 2 படத்தில் இவர் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடிப்பதற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
முன்னதாக புஷ்பா படத்திற்கு வாங்கிய சம்பளம் 2 கோடி. மூன்றே வருடங்களில் தன்னுடைய சம்பளத்தை ஏழு கோடி வரை உயர்த்தி விட்டார். கடைசியாக கடந்த 14ஆம் தேதி ராஜ்குமார் நடிப்பில் வெளியான படம் சாவா. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாவா படம் 500 கோடி வசூலித்து வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் வரலாறு படைத்துள்ளார் ராஷ்மிகா. அதன்படி இந்தியாவில் தொடர்ந்து மூன்று 500 கோடி வசூல் செய்த படங்களை கொடுத்த ஒரே நடிகை என்ற பெருமை பெற்றுள்ளார். இதற்கு முன்பு இவர் நடித்த புஷ்பா 2 இந்தியில் 800 கோடியும், அனிமல் ஹிந்தியில் 55 கோடியும் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.