இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டம் அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருப்பதாகவும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

அதன் பிறகு இந்தியா தன்னுடைய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 15-ல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் 50 ஓவர் உலக கோப்பையின் இறுதி போட்டி அகமதாபாத்தில் நவம்பர் 19-ல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.