பெங்களூரில் ஸ்விக்கியில் பால்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவரின் வாடிக்கையாளர் ஒருவர் கேக் ஆர்டர் செய்துள்ளார். திடீரென அந்த ஆர்டரை வாடிக்கையாளர் கேன்சல் செய்ய  அந்த கேக்கை பால்ராஜ் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று மகள் மற்றும் மனைவியுடன் சாப்பிட்டு உள்ளார்.

இந்த கேக் சாப்பிட்ட அவரது ஐந்து வயது மகள் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் இதனை சாப்பிட்ட மனைவி நாகலட்சுமி மற்றும் பால்ராஜ் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்விக்கியின் செய்தி தொடர்பாளர்;  இந்த துக்க செய்திக்கு மிகவும் வருந்துகிறேன்.!! எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வேன் என்றும் தெரிவித்ததுடன். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார்.

எங்களுக்கு உணவு பாதுகாப்பு மிகவும் முதன்மையானது ஸ்விக்கியில் உள்ள அனைத்து உணவகங்களும் எப்.எஸ்.எஸ்.ஐ உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.