
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த செட்டன் ரக்கசாகி(14) என்ற சிறுவன் 8- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதேபோல சாய்(12) என்ற சிறுவன் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தனர்.
நேற்று மாலை ஐந்து ரூபாய் சிற்றுண்டி பொட்டலத்தை பகிர்வது தொடர்பாக இரண்டு சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த சாய் சேட்டனை கத்தியால் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த சேட்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சேட்டன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆறாம் வகுப்பு படிக்கும் சாயை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.