தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் சட்டையை ஒழுங்காக டக்கின் செய்யவில்லை எனக் கூறி ஒன்பதாம் வகுப்பு மாணவரை உடற்கல்வி ஆசிரியர் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடற்கல்வி பீரியட் நடந்த போது மாணவன் மைதானத்திற்கு சென்றுள்ளான். அப்போது ஆசிரியர் மாணவனின் கன்னத்தில் ஐந்து முறை அறைந்ததாக தெரிகிறது. இதனால் சிறுவனின் காது ஜவ்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.