
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டத்தில் ஒரு 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு வாலிபர் ஒருவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களாக பழகி வந்த நிலையில் இடையில் சில காலம் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த சிறுமிக்கு அந்த வாலிபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஜான்சி நகருக்கு வருமாறு அழைத்துள்ளார். ஒருவேளை வராவிடில் அந்த சிறுமியின் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி வாலிபர் சொன்ன இடத்திற்கு சென்றார். அங்கு வைத்து சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு அறையில் 5 நாட்களாக அடைத்து வைத்து அவர் சிறுமியை வன்கொடுமை செய்த நிலையில் எப்படியோ தப்பித்து சிறுமி தன் பெற்றோரிடம் சேர்ந்தார். இது தொடர்பாக கடந்த 1-ம் தேதி சிறுமி தன் பெற்றோருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்ற வருவதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ண லால் சந்தினி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.