
கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஐந்து வருடங்களாக படக்குழு இயக்கி வருகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா ரசிகர்களிடையும் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், ஜூலை 12 – ம் தேதி படத்தை பட குழு உலகம் முழுவதும் திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனவரி 18 2019-ல் தொடங்கிய படப்பிடிப்பு பணி முடிவடைந்து தொடங்கிய நிலையில் உலக நாயகன் கமலஹாசன் அவர்களுக்கும் இயக்குனர் சங்கர் அவர்களுக்கும் இதுவே முதல் நீண்ட படப்பிடிப்பு பணியாகும்.