உத்திரபிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் அதனை தடுக்காமல் சுற்றி நின்று வீடியோ எடுத்த சம்பவம் மனசாட்சியே உலுக்குவதாக அமைந்துள்ளது. அதாவது காபூர் மாவட்டத்தில் 5 வயது சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவனை கடந்த 19ஆம் தேதி ஒரு பண்ணையில் வைத்து இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்த நிலையில் அதனை தடுக்காமல் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இ

து தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவ்வழியாக ஆடு மேய்க்க சென்ற இருவர் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்தனர். இந்த சம்பவம் சிறுவனின் பெற்றோருக்கு உடம்பில் உள்ள காயங்களை வைத்து தெரிய வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதித்த போது தான் நடந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக கடந்த 26 ஆம் தேதி சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். மேலும் இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.