தமிழ் சினிமா துறையில் நடிகர்களுக்கு ரெட்கார்டு போடப்படுவது இதற்கு முன் பல முறை நடந்துள்ளது. இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் 5 முக்கிய ஹீரோக்கள் மீது புகார் கூறி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு தேதி கொடுக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, சிம்பு, விஷால், அதர்வா, யோகிபாபு, எஸ்.ஜெ.சூர்யா ஆகிய நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர்கள் நோட்டீஸுக்கு பிறகும் இதனை தொடர்ந்தால் அவர்கள் உடன் இனிமேல் எந்த தயாரிப்பாளரும் பணியாற்றக்கூடாது என முடிவெடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். அதோடு தியேட்டர் வாசலில் எடுக்கப்படும் விமர்சனங்கள் 3 நாட்களுக்கு பின் தான் வர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த விமர்சனங்களால் தயாரிப்பாளர் ஒருஆள் மட்டும் தான் அதிகம் நஷ்டமடைகிறார் என்றும் கூறி இருக்கின்றனர்.