தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று தான் அனைவராலும் அழைக்கப்பட்டார். கடந்த 19 96 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கலந்த 2001 ஆம் ஆண்டு ஃபேஷன் டிசைனர் ஆன ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது நியூசிலாந்தில் செட்டில் ஆன அப்பாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் பாடசாலையில் படிக்கும் போது ஒரு பெண்ணுக்கு 45 நிமிடம் முத்தம் கொடுத்துள்ளேன். ஹிந்தி மியூசிக் வீடியோ பண்ணும்போது ஒரு முத்த காட்சியில் நான் நடித்தேன். அப்போது இந்த சம்பவம் நடந்தது. ஒரு கட்டத்தில் எனக்கும் அந்த நடிகைக்கும் முத்த காட்சி மிகவும் போர் அடித்து விட்டது என கூறி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.