
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் sbi வங்கி தொழில் கடனுக்காக காத்திருப்பருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வெறும் 45 நிமிடங்களில் கடன் வழங்குவதற்கு MSME டிஜிட்டல் கடன்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு தொழில் கடன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்றும் எஸ்பிஐ வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறைகள் மூலம் 50 லட்சம் ரூபாய் கடன் வழங்க எஸ்பிஐ வங்கி திட்டமிட்டுள்ளது