திருப்பூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக சில நபர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது மாநகராட்சி பகுதியில் உள்ள சில பெட்டிக்கடைகள் மற்றும் மதுபான கடைகளில் புகையிலை விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மதுபான கடை மற்றும் சில பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 45 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் மொத்தம் 12 லட்ச ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர்.