
10ம் வகுப்பு தகுதியுடன் மத்திய அரசின் வேலைவாய்ப்பை பெறலாம். அது குறித்தான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 44,228 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்), டக் சேவக் போன்ற பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பதவிக்கு ஏற்ப மாதம் ரூ.15,000க்கு குறையாமல் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு தகுதியும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.