இந்தியாவில் 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும் என்று இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் மூன்று புதிய ரயில்வே வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். விமான நிறுவனங்கள் புதிதாக ஆயிரம் விமானங்கள் வாங்க உள்ளன.

உதான் திட்டத்தில் 550 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டில் விமான நிலையங்கள் 149 ஆக அதிகரிக்கப்படும். மேலும் நாட்டின் புதிய விமான நிலையங்கள் மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.